twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம் பணத்தில் நம் இனத்தை அழிப்பதா? - தங்கர் ஆவேசம்

    By Staff
    |

    Thankar Bachan
    நம்மிடம் வசூலித்த பணத்தில் ஆயுதம் செய்து நம் இனத்தையே அழிக்கிறது இந்திய அரசு என கொதிப்புடன் பேசினார் இயக்குநர் தங்கர் பச்சான்.

    வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அங்காடித் தெரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.

    விழாவில் இயக்குநர்கள் பாலு மகேந்திரா, அமீர், சசிகுமார், பாலாஜி சக்தி வேல், சுந்தர் சி, பசங்க பாண்டிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பாடல் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது:

    நாமெல்லாம் திரைக்கலைஞர்கள். கோடிக் கணக்கில் பணம் கொடுத்து நம்மை வாழவைத்த தமிழ் உறவுகள் இன்று கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

    நம்மிடம் வரியாகவும், நன்கொடையாகவும், போர் வீரர் நிதியாகவும் பெற்ற பணத்தில் தயாரித்த ஆயுதங்களை நமது மக்கள் மீதே பிரயோகிக்கிறது இந்திய அரசு. மனது சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறது. சினிமாவில் 24 சங்கங்கள் இருந்தும் பலனில்லை. ஒன்றும் பண்ண முடியாமல் கிடக்கிறோம்.

    6-ந்தேதி சோனியா தமிழகம் வருகிறார். நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இனி மவுனமாக இருந்து பயனில்லை. நமது எதிர்ப்புதான் இந்த இனத்தை அடையாளம் காட்டும், என்றார்.

    பாலு மகேந்திரா, அமீர் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

    தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியன், கருணாமூர்த்தி நன்றி கூறினர். படத்தின் நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி ஆகியோரும் வந்திருந்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X