மாட்டு வண்டிக்கு எதிராக ரவீனா!

மாடுகளை துன்புறுத்தும் மாட்டு வண்டிகளுக்கு விடை கொடுப்போம் என்ற பிரசாரத்தில் பிராணிகள் நலம் விரும்புவோர் அமைப்பு (பெடா) குதித்துள்ளது. இந்தப் பிரசாரத்திற்கு திரையுலகினரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
நடிகைகள் ரவீனா டாண்டன், இஷா கோபிகர், நடிகர்கள் ராகுல் கண்ணா, அக்ஷயி கண்ணா, அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டோர் மாட்டு வண்டிகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
மாடுகளையும், எருதுகளையும் பூட்டி ஓட்டப்படும் வண்டிகளை இனியும் ஆதரிக்கக் கூடாது. பெட்ரோல் டேங்கர்களைக் கூட மாட்டு வண்டியில் ஏற்றி சுமக்க விடுகின்றனர். இது மிகவும் கொடுமையானது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் இதுதொடர்பான நேரடிப் பிரசாரத்தில் இவர்கள் ஈடுபடுவார்களா என்று தெரியவில்லை.
Comments


Click it and Unblock the Notifications