புதுப் பொலிவுடன் மிரட்ட வரும் அடிமைப்பெண்!

டி.டி.எஸ் இசை மற்றும் சினிமாஸ்கோப் தொழில் நுட்பத்துக்கு இந்தப் படத்தை மறுபடியும் மாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெளியான அடிமைப்பெண், வசூலில் புதிய சாதனைப் படைத்தது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை கே.வி.மகாதேவன் இசை.
இன்றைய படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வகையில் டிஜிட்டல் மற்றும் டி.டி.எஸ் தொழில் நுட்பத்தில் இந்தப் படமும் கலக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு முயற்சியில் இறங்கியுள்ளது டைமண்ட் பிக்சர்ஸ்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகம் இயக்கத்தில் உருவான முதல் படமான நாடோடி மன்னனையும் நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றப் போகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications