ஐஸ்வர்யாவின் பரத கச்சேரி!

ஐஸ்வர்யா தனுஷ், சிறந்த கிளாசிகல் டான்ஸர் என்பது அனைவரும் அறிந்தது. திருமணமாகி, கணவர், குடும்பம் என செட்டிலாகி விட்ட போதிலும் அவருக்குள் பரதநாட்டிய வேகம் தணியவில்லை.
இந்த நிலையில் பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றைக் கொடுக்க ஆர்வம் பிறந்தது ஐஸ்வர்யாவுக்கு. இதற்கு ரஜினி குடும்பத்தினரும், தனுஷ் குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்து, ஊக்கமும் அளித்தனர். இதையடுத்து ஐஸ்வர்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நடந்தது.
தனுஷ், அவரது தாயார் விஜயலட்சுமி, லதா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், செல்வராகவன் மனைவி நடிகை சோனியா அகர்வால், மகன் யாத்ரா என அனைவரும் திரண்டு வந்து ஐஸ்வர்யாவின் நடனத்தைக் கண்டு களித்து ஊக்கப்படுத்தினர்.
பழம்பெரும் நடிகையும், நடன நிபுணருமான வைஜெயந்தி மாலாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஐஸ்வர்யாவை மகிழ்வித்தார்.
ஐஸ்வர்யாவுடன், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியும் சேர்ந்து ஆட ஆட்டம் களை கட்டியது. ஐஸ்வர்யாவின் நடனத்தால் நெகிழ்ச்சி அடைந்த கணவர் தனுஷ், ஐஸ்வர்யாவைக் கட்டிப்பிடித்து பாராட்டியது அனைவரையும் கவர்ந்தது.
சிறப்பாக நடனம் ஆடிய ஐஸ்வர்யாவை வைஜெயந்தி மாலா வெகுவாகப் பாராட்டினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் ஐஸ்வர்யாவை பாராட்டிப் பேச அவரது சிவந்த முகம் மேலும் சிவந்து போனது.
சூப்பர் ஸ்டார் மட்டும்தான் நிகழ்ச்சியில் மிஸ்ஸிங் - எந்திரன் படப்பிடிப்பில் அவர் பிசியாக இருந்ததால் அவரால் வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











