twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நடிகை ஆகிறார்!

    By Staff
    |

    Muthulakshmi
    சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி நடிக்க வருகிறார்.

    சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. கடந்த 1990ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முத்துலட்சுமிக்கும், வீரப்பனுக்கும் தர்மபுரி மாவட்டம் நெருப்பூரில் கல்யாணம் நடந்தது. வீரப்பன், முத்துலட்சுமி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளிப் படிப்பில் உள்ளனர்.

    வீரப்பனின் கதையை படமாக்க பலரும் முனைந்தனர். வீரப்பன் உயிருடன் இருந்தபோது அவரது வாழ்க்கையை திரைப்படமாக்க ராம் கோபால் வர்மா முயன்றார். ஆனால் அதுகுறித்த ஆய்வில் அவர் தீவிரமாக இருந்தபோதுதான் 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து தனது திட்டத்தைக் கைவிட்டார் ராம் கோபால் வர்மா.

    வீரப்பன் மறைவுக்குப் பின்னர் வேறு சிலர் வீரப்பன் கதையைப் படமாக்க முயன்றனர். ஆனால் முத்துலட்சுமி ஆட்சேபித்ததால் அவர்களும் அந்த முயற்சிகளை விட்டு விட்டனர்.

    சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியின் சார்பில் சந்தனக் காடு என்ற வீரப்பன் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் உருவாக்கப்பட்டது. முதலில் இதற்கு முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். கோர்ட்டுக்கும் சென்றார். பின்னர் மக்கள் தொலைக்காட்சி சார்பில் வீரப்பனை தவறாக சித்தரிக்க மாட்டோம் என உத்தரவாதம் தரப்பட்டது. அதன் பேரில் அத்தொடரை ஒளிபரப்ப முத்துலட்சுமி சம்மதம் கொடுத்தார். தற்போது சந்தனக்காடு மக்கள் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த நிலையில் வீரப்பனை அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் எந்த அளவுக்கு தவறாகப் பயன்படுத்தினர். அவரை வைத்து எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் ஒரு படம் தயாராகவுள்ளதாம். அதில் முத்துலட்சுமி நடிக்க உள்ளார். முத்துலட்சுமியாகவே அவர் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை நடிக்க வேண்டும், இணைத் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். நடிக்க மட்டும் இப்போதைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். இணைத் தயாரிப்பாளராக இருப்பதா, இல்லையா என்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கவுள்ளேன்.

    வேறு சில தயாரிப்பாளர்களும் எனது கணவரின் வாழ்க்கையை படமாக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.

    எனது கணவரின் வாழ்க்கையை மற்றவர்கள் படமாக எடுத்தால் அதில் தவறுகள் நேரலாம். எனவே நானே எனது கணவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க திட்டமிட்டுள்ளேன். இதுகுறித்து இன்னும் விரிவாகத் திட்டமிடவில்லை என்றார் முத்துலட்சுமி.

    வீரப்பன் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜையும் முத்துலட்சுமி அணுகியதாக கூறப்படுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X