பெண் ஜோசியரை காரில் கெடுக்க முயற்சி-போஜ்பூரி தயாரிப்பாளர் கைது

By Staff

Raja Chaudhary with Shweta Tiwari
மும்பை: தன்னைப் பார்க்க வந்த பெண் ஜோசியரை, அவர் காரிலிருந்து இறங்குவதற்குள் காருக்குள்ளேயே வைத்து கற்பழிக்க முயன்றதாக, போஜ்பூரி படத் தயாரிப்பாளரும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் 2வது இடம் பெற்றவருமான ராஜா செளத்ரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போஜ்பூரி படத் தயாரிப்பாளராக இருப்பவர் செளத்ரி. இவர் சமீபத்தில் கலர்ஸ் டிவியில் நடந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு 2வது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையி்ல் பெண் ஜோசியரை கற்பழிக்க முயன்றதாக அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஜோசியருக்கு வயது 23. இவரிடம்தான் பட ரிலீஸ், பூஜை உள்ளிட்ட அனைத்துக்கும் நேரம் குறித்துக் கேட்பாராம் செளத்ரி. செளத்ரியின் ஆஸ்தான ஜோதிடராக அந்தப் பெண் ஜோதியர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் மேற்கு மும்பையின் சாந்தாகுரூஸில் உள்ள ஒரு இடத்திற்கு வருமாறும், அங்கு பழைய பாக்கிப் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் ஜோதிடப் பெண்ணை அழைத்துள்ளார் செளத்ரி.

அதை நம்பி அந்த பெண்ணும் காரில் கிளம்பியுள்ளார். நேற்று இரவு 10.30 மணிக்கு செளத்ரி குறிப்பிட்ட இடத்தை வ்நதடைந்தார் ஜோதிடர். அப்போது வேகமாக வந்த செளத்ரி, காரிலிருந்து பெண் ஜோதிடர் இறங்குவதற்குள் அவரைப் பலவந்தப்படுத்தி கற்பழிக்க முயன்றாராம்.

அவரிடமிருந்து எப்படியோ தப்பி வந்த பெண் ஜோதிடர் சான்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், செளத்ரியை போலீஸார் கைது செய்தனர்.

ஏற்கனவே ஒரு அரவாணியிடம் வம்பு இழுத்து போலீஸில் சிக்கியவர்தான் இந்த செளத்ரி. மேலும் குடித்து விட்டு தனது பெற்றோரை அடித்து உதைத்ததாகவும் ஒரு முறை சிக்கியுள்ளார் செளத்ரி.

ராஜா செளத்ரி, பாலிவுட்டின் கிளாமர் நாயகிகளில் ஒருவரும், பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளவருமான ஸ்வேதா திவாரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் டைவர்ஸ் கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X