லிஸ்ட்டைக் கொடுத்தார் புவனேஸ்வரி... பீதியில் டாப் நடிகைகள்!

Bhuvaneswari
விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம்.

இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும்.

அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, 'தான் சொன்னது சும்மா இல்லை... நிஜம்தான்' எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி.

வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான 'டேட்டா பேஸை'யே கொடுத்து முன்னணி நடிகைகளின் 'பொருளாதார பேஸில்' கை வைத்து விட்டார் புவனேஸ்வரி.

அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன 'ரேட்' என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று 'ரேட்' வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார்.

அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம்.

இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் 'ரேட்'டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.

யார், யார் ...க்ளூ இதோ!

இவர்களில் ஒரு நடிகை மலையாள பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். தற்போது வாய்ப்பு இல்லாமல் சென்னையில் அழகிகளை வைத்து விபச்சாரத் தொழிலை முழுவீச்சில் செய்கிறாராம்.

இன்னும் 2 நடிகைகள் காதல் திருமணம் செய்துவிட்டு, தற்போது கணவர்களைப் விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இப்போது துணையாக இருப்பவர்கள் பத்துப் பதினைந்து வெளிமாநில அழகிகள் மற்றும் நிறைய கஸ்டமர்கள்தானாம்.

'ச' என்று தொடங்கும் நடிகை நான்காமவர். இவர் இன்றைய முக்கிய கதாநாயகர்கள் இருவருடனுமே கதாநாயகியாக நடித்தவர். தென் மாநில மொழிகள் எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வந்து, இப்போது ஓரமாக உல்லாச தொழில் செய்கிறாராம். இவரையும் பிடிக்க போலீசார் துடிப்போடு உள்ளனர்.

இன்னொரு முன்னணி நடிகையின் பெயரைப் பார்த்ததும் இவர் இன்னுமா திருந்தவில்லை என தலையில் அடித்துக் கொண்டார்களாம் போலீசார். இவர் பலமுறை போலீசில் மாட்டி, மேலிடத்து தலையீடுகளின் பேரில் எச்சரித்து விடுவிக்கப்பட்டவராம். கல்யாணமும் ஆகிவிட்டது. இருந்தாலும், இந்தத் தொழிலில் இன்னும் பல முக்கிய விஐபி கஸ்டமர்களுடன் கொடிகட்டிப் பறக்கிறாராம். மணிக்கு ரூ.1 லட்சம் வாங்கும் பிரிவிலிருப்பவர் இந்த அம்மணி.

ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.50 ஆயிரம் என்று வாங்கும் 'ஹைடெக்' நடிகைகளைப் பிடிக்கத் தேவையான பணத்தைத் தங்களால் தயார் செய்ய முடியாது என்பதால் அவர்களைப் பிடிப்பதில் தற்போது போலீசார் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அந்த நடிகைகள் அழகிகளை வைத்து விபசாரத்தை ஒரு தொழிலாக செய்யவில்லை.

பொழுது போக்காக லட்சக்கணக்கில் வாங்கிக்கொண்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என பறந்து பறந்து சுகம் கொடுக்கிறார்களாம். அவர்களை பிடித்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களாக அரசு இல்லத்தில்தான் அடைக்க முடியும். கைது செய்து ஜெயிலுக்கு அனுப்ப முடியாது என்பதால், சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்களாம் போலீஸார்.

நான் இருக்கேனா .. போன் போடும் நடிகைகள்!

புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதான சம்பவம் சினிமா வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது. மேலும் விபசாரத்தில் ஈடுபடும் எல்லா நடிகைகளையும் பிடிக்க வேண்டும் என்று போலீசாரிடம் அவர் சண்டை போட்டது சினிமா வட்டாரத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புவனேஸ்வரி யார் யார் பெயரை போலீசாரிடம் கொடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள சினிமா உலகத்தினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். சில நடிகைகள் இதுபற்றி பத்திரிகை நிருபர்களிடம் தொடர்பு கொண்டு "அந்த லிஸ்ட் உங்ககிட்ட இருந்தா ஒரு காப்பி தர முடியுமா?" என்று கேட்டார்களாம்.

இன்னொரு பக்கம் திரையுலக அமைப்புகளைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்துப் பார்ட்டிகள் சிலர் முன்னணி நடிகைகளைப் பாதுகாப்பதில் மும்முரம் காட்டுகிறார்களாம். (இவர்களின் பகுதி நேர வேலையை இப்படிப்பட்ட பலான பிரச்சினை எழும்போது உள்ளே புகுந்து காப்பாற்றுவதுதான்)

'மாட்டிக்கிட்ட கோபத்தில் அந்த நடிகை சொல்வதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க" என போலீசாரிடம் தங்கள் செல்வாக்கைக் காட்டி மிரட்டலாகப் பேசுகிறார்களாம் இந்த நபர்கள்.

புவனேஸ்வரி மூலமாக நாறப் போகும் நடிகைகள் குறித்து அறிந்து கொள்ள திரையுலகில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கூட ரொம்பவே ஆர்வத்தோடு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X