ஜனவானி.. சென்சார் போட்ட கட்!

அட்சயா மல்ட்டி மீடியா என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் இன்னொருவன். முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர். நாயனாக ஆதித்யாவும், மனோஹா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
படத்தில் கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்டிருப்பவர் ஜனவானி. இரு பாடல்களுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
அதிலும் மொச்சக்கொட்டை முழி பார்த்து என்ற பாடலில் படு கவர்ச்சியாம். இன்னொரு பாடல் காதல் தேசத்திலே ..
படத்தை முடித்த படக்குழுவினர் சென்சாருக்குச் சென்றனர். படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், ஜனவானி வரும் இரு பாடல்களிலும் அவரது தொப்புளை மிக மிக குளோசப் ஆக வைத்துப் படம் பிடித்திருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனராம்.
இப்படியே விட்டால் அது ஆபாசமாக தெரியும். எனவே கட் பண்ண வேண்டும் என்று கூறி விட்டனராம். இதையடுத்து ஜனவானியின் தொப்புள் காட்சியை மட்டும் கட் செய்துள்ளனர்.
அடிமட்ட அளவிலிருந்து ஒருவன் எப்படி தனது தன்னம்பிக்கையால் மேலே போகிறான் என்பதுதான் படத்தின் கதையாம். அதுக்கு எதுக்கு இப்படி ஒரு கவர்ச்சி?...


Click it and Unblock the Notifications











