தம்பிக்கு படம் எடுக்கும் தேவயானி

பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களுல் ஒருவராக, குண்டுப் பையனாக வந்து போனவர் நகுல். பாய்ஸ் படத்தில் நடித்த சித்தார்த், பரத் ஆகியோர் சூப்பர் ஹிட் ஹீரோக்களாகி சக்கை போடு போட்டு வருகிறார்கள். சித்தார்த் தெலுங்கைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். பரத் கோலிவுட்டில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது நகுலும் இணைந்துள்ளார். காதலில் விழுந்தேன் மூலம் தனி நாயகனாக அறிமுகமாகி, நாக்க மூக்க பாட்டு மூலம் படமும், கூடவே நகுலும் ஹிட் ஆகியுள்ளனர்.
பட்டி தொட்டியெங்கும் ரொம்ப நாட்களாகவே நாக்க மூக்க பாட்டு சூப்பர் ஹிட்டாக வலம்வந்து கொண்டுள்ளது. தற்போது படமும் ஹிட் ஆகியுள்ளதால், கோலிவுட்டின் கவனிப்புக்குரிய இளம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் நகுல்.
இந்த நிலையில் தனது சகோதரியான நடிகை தேவயானியிடம் தனக்காக ஒரு படம் தயாரித்துத் தருமாறு கேட்டுள்ளாராம் நகுல். தம்பி நடித்த முதல் ஹீரோ படமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் சந்தோஷமடைந்துள்ள தேவயானி, கண்டிப்பாக தயாரிக்கிறேன் என்று உறுதியளித்துள்ளாராம்.
கணவரை ஹீரோவாக வைத்து தற்போது தேவயானி ஒரு படம் தயாரிக்கிறார். இதை முடித்து விட்டு நகுலுக்காக ஒரு படம் தயாரிப்பாராம்.


Click it and Unblock the Notifications











