கரு பழனியப்பன்.காம்!

By Shankar

Meenakshi and Karu Pazhaniyappan
இன்றைய இயக்குநர்களில் அதிக தேடல், அதைவிட அதிகமாகவே 'பேச'க் கூடியவர் கரு பழனியப்பன்.

பெரும்பாலும் அந்தப் பேச்சு முழுக்க இழந்து போன நம் கலாச்சார அடையாளங்கள், போலித்தனங்களை தோலுரிக்கும் ஒரு ஆதங்கமாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

மேடைகளில் கிடைக்கும் மைக் வாய்ப்புகளில் கூட போலி புகழாரம் சூட்டாமல், எதார்த்தமாக பேசுபவர்களில் கரு பழனியப்பனும் ஒருவர்.

இணையதளங்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்த கலைஞரான அவர், தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள புதிய தனிநபர் இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

http://www.karupalaniappan.com என்ற இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் கரு பழனியப்பன்:

'ஒவ்வொரு எழுத்தாளரும் இயக்குநராக விரும்புகிறார்; ஒவ்வொரு தயாரிப்பாளரும் எழுத்தாளராக விரும்புகிறார்; ஒவ்வொரு நடிகரும் தயாரிப்பாளராக விரும்புகிறார்... யாரும் திருப்தியடையவதில்லை', என்ற காட்ப்ரைட் ரெய்ன்ஹாட்-ன் வாசகத்தை வைத்திருக்கிறார்.

கரு பழனியப்பன் கடைசியாக இயக்கிய படம் மந்திரப் புன்னகை. இந்தப் படத்தில் இவரே நாயகனாகவும் அறிமுகமாகியிருந்தார். நிதிப் பிரச்சினை காரணமாக அடுத்த படம் தாமதமாவதாகவும், விரைவில் சரியாகி, புதிய படம் தொடங்கிவிடும் என்றும் இந்த இணையதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தளம் மூலம் இனி தொடர்ந்து தனது படங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார் கரு பழனியப்பன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X