உதவிகள் 'குமுறல்'-இயக்குநர் 'திணறல்'!

ஷாம் நாயகனாக நடிக்கும் படம் அந்தோணி யார். மீனவர் வேடத்தில் இதில் ஷாம் நடித்துள்ளார். இப்படத்தை பாண்டியன் இயக்கி வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திருச்செந்தூர்அருகே படப்பிடிப்பு நடந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்ததும், அவரை படத்தின் உதவி இயக்குநர்கள் ஹோட்டல்அறைக்குள் வைத்து தாறுமாறாக அடித்து உதைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனைவருக்கும் முன்பு உதவி இயக்குநர்களை ஒருமையில் அழைத்தும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும் பாண்டியன் அவமதித்ததாகவும், இதனால்தான் கோபமடைந்து, இயக்குநரை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பாண்டியன் இதை அப்படியே மறுத்துள்ளார். யார் இப்படி பரப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றார்.
இருப்பினும், உதவி இயக்குநர்களுக்கும், கலை உதவி இயக்குநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அது உண்மை. அதுவும் கூட வாய்த்தகராறுதான். மற்றபடி என்னை யாரும் அடிக்கவில்லை என்றார் பாண்டியன்.
என்ன நடந்ததோ? அந்தோணியாருக்கே வெளிச்சம்!


Click it and Unblock the Notifications











