கோலிவுட்டின் 'பெரிய பிப்ரவரி'

By Staff

Arya in Naan Kadavul
பிப்ரவரி மாதம், கோலிவுட்டுக்கு குட்டித் திருவிழாக் காலமாகியுள்ளது. இந்த மாதம் மட்டும் 15 புதுப் படங்கள் தியேட்டர்களை அலங்கரிக்க வருகின்றன.

இதை திரையுலக பி.ஆர்.ஓக்கள் நமக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சொல்கிறோம்.

15 படங்கள் மொத்தமாக வருவதால் சில படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லையாம். இதனால் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிற படிக்காதவன், சுமாராக போய்க் கொண்டிருக்கிற வில்லு ஆகிய படங்களைத் தூக்குமாறு தியேட்டர் அதிபர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாம்.

வெளியாகப் போகிற 15 படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

நிச்சயம் வரும் படங்கள் ..

நான் கடவுள் - பிப். 6
பெருமாள் - பிப். 7
சிவா மனசுல சக்தி - பிப். 13.
கார்த்திக் அனிதா - பிப். 14
அதே நேரம் அதே இடம் - பிப்.14
1977 - பிப். 14 (பிப். 6 அன்றே வந்திருக்க வேண்டியது)
நந்தலாலா - பிப். 20
தீ - பிப். 27
ஆனந்த தாண்டவம் - பிப். 27

பசுபதி, அஜ்மல் நடித்துள்ள த.நா. அல - 4777 படம் சந்தேகப் பட்டியலில் உள்ளது. 20ம் தேதி வெளியாகலாம் எனக் கூறப்பட்டுள்ளது, ஆனால் உறுதி இல்லை.

இவை தவிர குரு என் ஆளு, நியூட்டனின் 3ம் விதி, பலம், கார்த்திகை, லாடம் ஆகிய படங்களும் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸாகும் என்ற நிலையில் உள்ளன.

மேற்கண்ட பட்டியலில் எத்தனை படங்களுக்குத் தியேட்டர் கிடைக்கும், குறிப்பிட்ட தினத்தன்று அவை தியேட்டர்களுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X