நவம்பர் ரிலீஸ்-காத்திருக்கும் வினியோகஸ்தர்கள்

இந்த வாரம் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. ஆனால் அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி வாரணம் ஆயிரம் மற்றும் அபியும் நானும் ஆகிய இரு பெரிய படங்கள் ரிலீஸாகின்றன.
இவற்றில் வாரணம் ஆயிரம் படத்துக்கு பட்ஜெட்டை மீறி எக்கச்சக்க செலவு செய்திருப்பதால், பல பகுதிகளில் வினியோகஸ்தர்கள் வாங்க முன் வரவில்லை.
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகும் அபியும் நானும் படத்துக்கு, மேல்மட்ட ரசிகர்களுக்கான படம் என்ற முத்திரை விழுந்துவிட்டது.
அதற்கடுத்த வாரம் சுந்தர் சி- நமீதாவின் கமர்ஷியல் படம் பெருமாள், மாதவன்-மம்தா நடித்த குரு என் ஆளு ரிலீசாகின்றன.
தெனாவட்டு:
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது வெளியீடான தெனாவட்டு படம் நவம்பர் 21-ம் தேதிதான் வெளியாகிறது. முதல் வெளியீடான காதலில் விழுந்தேன் வினியோகஸ்தர்களை பெரும் திருப்திப்படுத்தியிருப்பதால், தெனாவட்டு பெருத்த எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் நடித்துள்ள பூ மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள வெண்ணிலா கபடி குழு ஆகியவை 28-ம் தேதி வெளியாகின்னறன.


Click it and Unblock the Notifications











