twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவம்பர் ரிலீஸ்-காத்திருக்கும் வினியோகஸ்தர்கள்

    By Staff
    |

    Jeeva with Poonam Bajwa
    தீபாவளிப் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் புஸ்வாணமாகிவிட்ட நிலையில், நவம்பர் மாத ரிலீஸ்கள்தான் கைகொடுக்க வேண்டும் என வினியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் காத்திருக்கின்றனர்.

    இந்த வாரம் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. ஆனால் அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி வாரணம் ஆயிரம் மற்றும் அபியும் நானும் ஆகிய இரு பெரிய படங்கள் ரிலீஸாகின்றன.

    இவற்றில் வாரணம் ஆயிரம் படத்துக்கு பட்ஜெட்டை மீறி எக்கச்சக்க செலவு செய்திருப்பதால், பல பகுதிகளில் வினியோகஸ்தர்கள் வாங்க முன் வரவில்லை.

    பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகும் அபியும் நானும் படத்துக்கு, மேல்மட்ட ரசிகர்களுக்கான படம் என்ற முத்திரை விழுந்துவிட்டது.

    அதற்கடுத்த வாரம் சுந்தர் சி- நமீதாவின் கமர்ஷியல் படம் பெருமாள், மாதவன்-மம்தா நடித்த குரு என் ஆளு ரிலீசாகின்றன.

    தெனாவட்டு:

    சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது வெளியீடான தெனாவட்டு படம் நவம்பர் 21-ம் தேதிதான் வெளியாகிறது. முதல் வெளியீடான காதலில் விழுந்தேன் வினியோகஸ்தர்களை பெரும் திருப்திப்படுத்தியிருப்பதால், தெனாவட்டு பெருத்த எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.

    ஸ்ரீகாந்த் நடித்துள்ள பூ மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள வெண்ணிலா கபடி குழு ஆகியவை 28-ம் தேதி வெளியாகின்னறன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X