சம்மர் ஸ்பெஷலாக வரும் 15 புதுப் படங்கள்!

By Sudha

Irumbu Kottai Murattu Singam
இந்த ஆண்டு கோடை தொடங்கி பாதி நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை ரிலீசான சம்மர் ஸ்பெஷல் படங்களில் எதுவும் தேறவில்லை. சமீபத்தில் வெளியான விஜய் நடித்த சுறாவும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

இந்த நிலையில் அடுத்தடுத்து 15 புதிய படங்கள் வெளியாகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியால் வெளியாகாமல் நின்ற படங்கள் இவை.

வருகிற வெள்ளிக்கிழமை இரும்பு கோட்டை முரட்டுச்சிங்கம், கோரிப்பாளையம், குட்டிபிசாசு, குரு சிஷ்யன் படங்கள் ரிலீசாகின்றன.

இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் அந்தக் கால கௌபாய் கதை. லாரன்ஸ், லட்சுமிராய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். குருசிஷ்யனில் சுந்தர்.சி - ஸ்ருதி இணைந்து நடித்துள்ளனர்.

கோரிப்பாளையம் படத்தை ராசு மதுரவன் இயக்கியுள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

சூர்யா நடித்த சிங்கமும் இந்தக் கோடையைக் குறி வைத்து களமிறக்கப்பட உள்ளது.

வருகிற 21-ந்தேதி அருண் விஜய் நடித்த மாஞ்சா வேலு திரைக்கு வருகிறது. அதே நாளில் விவேக் கதாநாயகனாக நடித்த மகனே என் மருமகனே படமும் திரைக்கு வருகிறது. இப்படத்தை டி.பி.கஜேந்திரன் இயக்கியுள்ளார்.

அம்பாசமுத்திரம் அம்பானி, மா, கனகவேல் காக்க, கற்றது களவு, ஐவர், 365 காதல் கடிதங்கள் போன்ற படங்களும் ரிலீசுக்குத் தயாராக உள்ளன. தியேட்டர்கள் கிடைப்பதைப் பொறுத்து இவற்றின் ரிலீஸ் முடிவு செய்யப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X