வரலாற்றைத் திரித்துக் கூறும் பழஸி ராஜா - தமிழகத்தில் எதிர்ப்பு

By Staff

Pazhassi Raja
மலையாளத்தில் மம்முட்டி - சரத்குமார் இணைந்து நடித்துள்ள பழஸி ராஜா படத்தைத் தமிழில் வெளியிட பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் வரலாற்றைத் திரித்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம் நடந்தது. அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராஜ்ஜியத்தை எதிர்த்து போர்க்குரல் கொடுத்தவர் பழசிராஜா. இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் முழக்கம் என்பதாகச் சித்தரித்துள்ளனாராம் கதையில்.

ஆனால் உண்மையில் முதல் சுதந்திரப் போராட்டக் குரல் எழுந்தது தமிழகத்தில்தான், அதுவும் தெண்பாண்டி நாட்டில்தான் என்பது வரலாறு. அதற்கு சரித்திர ஆதாரங்கள் பல உள்ளன.

பழஸிராஜாவின் காலத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தமிழகத்திலிருந்து முதலில் பூலித்தேவன் பின்னர், மருது பாண்டிய சகோதரர்கள் என்ற உண்மையைத் திரிக்கும் விதமாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பழஸிராஜா கேரக்டரில் மம்மூட்டி நடித்துள்ளார். எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை அமைத்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளதால், படம் தமிழகத்தில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X