சீதா, ராவணன் கேரக்டர்களின் டிரஸ் திருட்டு!

By Staff

still from Ramayan on NDTV Imagine
என்டிடிவி 'இமேஜின் டிவி'யில் ஒளிபரப்பாகி வரும் ராமாயன் தொடரில் நடிக்கும் சீதா, ராவணன் கதாபாத்திரங்கள் அணியும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள உடைகள் திருட்டு போய் விட்டன. இதையடுத்து புதிய உடைகள் வேகம் வேகமாக தைக்கப்பட்டு வருகின்றனவாம்.

என்டிடிவி குழுமத்தின் என்டிடிவி இமேஜின் டிவியில் ராமாயணத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் கேரக்டர்களுக்கான உடைகளை மும்பையில் உள்ள ஜூஹு காஸ்ட்யூம்ஸ் நிறுவனம்தான் தைத்துக் கொடுக்கிறது.

இந் நிலையில் இந்த நிறுவனத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள உடைகளையும், ரூ. 3 லட்சம் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டது.

திருட்டுப் போன உடைகள் அனைத்தும் சீதா மற்றும் ராவணன் கேரக்டர்களில் நடிப்பவர்கள் அணியும் உடைகளாம். இதனால் அந்தக் கேரக்டர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருட்டு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள ஜூஹு காஸ்ட்யூம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நிஷா, திருட்டு குறித்து புகார் கொடுத்துள்ளோம். அவற்றுக்குப் பதிலாக புதிய உடைகளை தைத்து வருகிறோம். இரு கேரக்டர்களும் முக்கியமானவை என்பதாலும், அந்தக் கேரக்டர்களுக்குரிய உடைகள் உடனடியாக தேவைப்படுவதாலும், இரவு பகலாக புதிய உடைகள் தைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X