ரூ. 450 கோடி.. தமிழ் உள்பட 6 புதிய சேனல்கள்!!
'மீடியா ஜெயன்ட்' ரூபர்ட் முர்டோக் தலைமையிலான அமெரிக்காவின் நியூஸ் கார்ப் நிறுவனம் ரூ.430 கோடி முதலீட்டில் 6 புதிய செய்திச் சேனல்களை இந்தியாவில் துவங்கவிருக்கிறது.
இந்த ஆறும் மாநில மொழி சேனல்களாக இருக்கும். அடுத்த 12 மாதங்களுக்குள் இந்த 6 சேனல்களும் முழு வீச்சில் இயங்கத் துவங்கிவிடும் எனறு முர்டோக் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கெனவே வெற்றிகரமாக இயங்கும் அச்சு ஊடக செய்தித் தாள்கள் அல்லது பத்திரிகைளில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றும், புத்தம் புதிதாக மாநில மொழிகளில் சேனல்களைத் துவக்குவதே பலனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அச்சு ஊடகத்துறையில் 26 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதால், அதில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த வாய்ப்பில்லை. புதிதாக தொலைக்காட்சி சேனல்களைத் துவங்க இதுவும் ஒரு காரணம் என்றும் முர்டோக் கூறினார்.
இந்த 6 தொலைக்காட்சிகளுள் ஒன்று தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.
'சேனல் டிராபிக் ஜாம்' ஆகும் அளவுக்குப் போய்விட்ட தமிழ் தொலைக்காட்சித் துறையில் முர்டோக்கின் இப் புதுமுயற்சி எந்தளவு பலன் தரும்?
பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











