அக்.22 வரை புதுப்பட ரிலீஸ் இல்லை.. விநியோகஸ்தர்கள் முடிவு!

By Chakra

Aishwarya Rai and Rajinikanth
வரும் அக்டோபர் 22 -வரை தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் கடந்த அக்டோபர் முதல் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசூலில் இந்தியாவின் வேறு எந்தப் படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளா, கர்நாடகாவில் தமிழ்ப் பதிப்புக்கு கிடைத்துள்ள வரவேற்பு அந்த மாநில திரையுலகினரை திகைக்க வைத்துள்ளது.

ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது தெலுங்கு ரோபோ.

இந்த நிலையில், தமிழகத்தில் 1400 திரையரங்குகளில் வெளியாகியுள்ள எந்திரன் வசூல் விநியோகஸ்தர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு கூறுகையில், "எதிர்பார்க்கப்பட்டதை விட பெரும் வசூலை எந்திரன் தந்துள்ளது. ரஜினியின் மேஜிக் இது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல... அவரைத் தவிர யாரையும் நம்பி இத்தனை கோடியை விநியோகஸ்தர்களான எங்களால் போடவும் முடியாது. மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களும் திருவிழாவில் இருந்தது போன்ற உணர்வு எங்களுக்கெல்லாம். எனவே அடுத்த மூன்று - நான்கு வாரங்களுக்கு வேறு புதிய படங்களை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்..." என்றார்.

அபிராமி ராமநாதன் கூறுகையில், "இந்த ஆண்டு சினிமா வியாபாரமே படுத்துவிட்ட சூழல்தான் இருந்தது. மொத்தமே 3 படங்கள்தான் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு ஓடின. ஆனால் அந்த குறைகளையெல்லாம் போக்கி, இந்தத் தொழிலை மீண்டும் நிமிர வைத்துள்ளது ரஜினியின் எந்திரன் என்றால் மிகையல்ல.

அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர். சொல்லப் போனால் அவர்களுக்கு புதிய மரியாதையே கிடைத்துள்ளது, எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு. இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சார்ந்து இயங்கும் திரையரங்குகள் குறைந்தது 50 நாட்களாவது எந்திரனை ஓட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இதுவரை அவர்கள் பல படங்களில் பட்ட நஷ்டத்தை சரிக்கட்டிக் கொள்ள இது உதவும். எனவே மற்ற தயாரிப்பாளர்கள் பொறுமை காக்க வேண்டும். இப்படிச் சொல்வதால் என்னை யாரும் தவறாகக் கருத வேண்டாம். நிஜத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.

தீபாவளிக்கு உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, வா குவாட்டர் கட்டிங் உள்பட 6 படங்கள் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மூன்று படங்கள்தான் வெளியாகும் சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X