அபுதாபி இந்திய திரைப்பட விழாவில் பருத்தி வீரன்!

அபுதாபி அதாரிடி ஃபார் கல்சர் ஹெரிடேஜூடன் இணைந்து இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்தியத் திரைப்பட விழா அபுதாபி கல்சுரல் பவுண்டேசன் அல்தப்ரா ஆடிடோரியத்தில் நவம்பர் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவை எமிரேட்ஸ் பிலிம் காம்பட்டிஷன் மற்றும் தி டிஜி பிலிம் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மொழித் திரைப்படம் என்னும் திட்டப்படி நாளை தமிழ் மொழிப் படம் திரையிடப்படுகிறது. இப்பிரிவுக்கு தேர்வாகியுள்ள படம் பருத்திவீரன்.
அமீர் இயக்கி, கார்த்தி- ப்ரியாமணி நடித்த பருத்தி வீரன் படம் ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
கேன்ஸ், பெர்லினாலே விழாக்களில் சிறந்த ஆசியப் படமாக விமர்சகர்களால் தேர்வு செய்யப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications