காமன்வெல்த் போட்டி- பிராண்ட் அம்பாசடர்களாகும் ரஹ்மான், ஷாருக் கான், சானியா

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் புயல் ஷாருக் கான், டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா, நடிகர் ஆமிர்கான், நடிகைகள் தீபிகா படுகோன், காத்ரீனா கைப் உள்ளிட்டோர் இதற்காக அணுகப்பட்டுள்ளனராம்.
இவர்கள் தவிர நானா படேகர், ஜான் ஆப்ரகாம், ஜாவேத் அக்தர், உஸ்தாத் அம்ஜத் அலிகான், தபேலா மாஸ்டர் ஜாகிர் உசேன், ராகுல் போஸ் உள்ளிட்டோரையும் அணுகியுள்ளனராம்.
இவர்கள் தவிர லியாண்டர் பயஸ், மகேஷ்பூபதி, சாய்னா நெஹ்வால், விஜேந்தர் குமார், அபினவ் பிந்த்ரா, ராகவேந்திர ரத்தோர், தன்ராஜ் பிள்ளை, ஜீவ் மில்கா சிங், பைசுங் புதியா உள்ளிட்டோரையும் பரிசீலித்து வருகின்றனராம்.
இந்தப் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரை அணுகியுள்ளனராம்.
அது சரி தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ரஹ்மான், சானியா மிர்ஸாவைத் தவிர வேறு எந்தப் பிரபலமும் இந்த காமன்வெல்த் போட்டிக் குழுவுக்கு கண்ணில் படவே இல்லையா. இந்தியா என்பது வட இந்தியா மட்டுமே என்ற மூடத்தனம் என்று ஒழியப் போகிறதோ...?


Click it and Unblock the Notifications











