ஷங்கரின் 'ஈரம்' பட ஆடியோ-வெளியிடும் ரஜினி!

காரணம், "என் வீ்ட்டில் என் மூத்த சகோதரரைப் போலவே ரஜினி அவர்களை நான் மதிக்கிறேன்... வீட்டில் விசேஷம் நடக்கும்போது, நமது சகோதரர் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் போன்றதுதான் என் படங்கள் தொடர்பான அனைத்து விழாக்களிலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதும். அவர் வந்தால் எனக்கு ஒருவித மனத் திருப்தியும் நிம்மதியும் கிடைக்கிறது!"
ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி, காதலன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அவர் தயாரித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி... இப்படி பல படங்களின் பூஜை, ஆடியோ வெளியீடு அல்லது வெற்றி விழா முதலானவற்றில் ரஜினிதான் சிறப்பு விருந்தினர்.
இப்போது ஷங்கர் 'வீட்டில்' மீண்டும் ஒரு விசேஷம். ஒரு தயாரிப்பாளராக அவர் தனது நான்காவது படத்தை வெளியிடுகிறார். படத்தின் பெயர் ஈரம். இயக்கம் அறிவழகன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஆடியோ வெளியீடு நடக்கிறது.
சத்யம் திரையரங்கில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கும் இந்த விழாவின் தலைமை விருந்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
முதல் ஆடியோ சிடி மற்றும் கேசட்டை ரஜினி வெளியிடுகிறார். இயக்குநர் எம் சசிகுமார் பெற்றுக் கொள்கிறார். தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன், கலைப்புலி சேகரன், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











