'காந்தி கணக்கு' ஆரம்பம்!

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார் ரமணா. நாயகன் படத்தில் ரித்தீஷுடன் நடித்த பிறகு, அவர் தனி நாயகனாக நடிக்கும் படம் இது.
இயக்குநர் சசியிடம் உதவியாளராக இருந்த சம்பத் ஆறுமுகம் இயக்குநராக அறிமுகமாகிறார் இந்தப் படம் மூலம்.
ஒரு நடித்தரக் குடும்பம் ரவுடிகளால் படும் இம்சையை, நாயகன் காந்திய வழியில் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
'கதையைக் கேட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன்.நெகிழ்ச்சியான பல திருப்பங்கள் கொண்ட கதை. நிச்சயம் நல்ல பெயர், பெரிய ஹிட்டைக் கொடுக்கும்' என்கிறார் ரமணா நம்பிக்கையுடன்.
புதிய நாயகி ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ரிஷி சாய் என்ற புதியவர் இசையமைக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications