ஷெர்லினுக்கு ஆபாச சிக்கல்

பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் ஷெர்லின் சோப்ரா. இவருக்கு மோனா சோப்ரா மற்றும் மேனகா என வேறு பெயர்களும் உள்ளன.
கவர்ச்சி காட்டுவதற்காகவே அவதரித்தவர் போல படு கிளாமரான ரோல்களாக இருந்தால் மட்டுமே நடிப்பார் ஷெர்லின்.
இதுதவிர சைடில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் போவது ஷெர்லினின் வழக்கம். எல்லாம் லோக்கல் நிகழ்ச்சிகள் அல்ல, வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள்தான்.
கடல் கடந்து தனது கிளாமர் கலாச்சாரத்தைப் பரப்பி வரும் ஷெர்லினுக்கு புது மிரட்டல் வந்துள்ளது.
மும்பை போலீஸை அணுகி இதுதொடர்பாக ஷெர்லின் புகார் கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஒருவர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் சாதாரணமாகத்தான் மிரட்டினார்.
எனது ஆபாசப் படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ஒரு படத்துக்கு ரூ. 10 லட்சம் வீதம் தர வேண்டும் எனவும் மிரட்டினார்.
இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது எனது படங்களை ஆபாசப் படங்களாக கிராபிக்ஸ் மூலம் மாற்றி அவற்றை இன்டர்நெட்டிலும், எம்.எம்.எஸ். மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்.
இதனால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த நபர் தன்னுடன் செல்போனில் பேசியது குறித்த டேப் ஆதாரத்தையும் போலீஸில் ஷெர்லின் தாக்கல் செய்துள்ளார்.
இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











