எந்திரன் வெற்றிக்காக நெல்லையில் சிறப்புப் பூஜை

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் எந்திரன். இதில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். படத்தை ஷங்கர் இயக்குகிறார். படபிடிப்பு நிறைவடைந்து விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
எந்திரன் படம் வெற்றி பெற வேண்டி பாளை ஓன்றிய ரஜினி மன்றம் சார்பில் பாளை வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோவில் அருகே உள்ள சக்கர விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பாளை ஓன்றிய ரஜினி மன்ற தலைவர் ரங்காபாலன், தலைமை தாங்கினார். டைகர் மணி, செல்லத்துரை, தளபதி தங்கவேல், சுப்புராஜ், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments


Click it and Unblock the Notifications