சேப்பாக்கத்தில் ஸ்டார் கிரிக்கெட்!

இந்தப் போட்டியில் கோலிவுட் மற்றும் டோலிவுட் அணிகள் பங்கேற்கின்றன. இரு அணிகளும் மோதவுள்ள இந்தப் போட்டியில், தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் பங்கேற்கின்றனர்.
ஹைபவர் வி மீடியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுரேஷ் கூறுகையில், இது முதல் போட்டி அல்ல. மாறாக 3வது போட்டி. இதற்கு முன்பு இருமுறை சேப்பாக்கத்திலும், ஷார்ஜாவிலும் நடத்தியுள்ளோம்.
தற்போது நடைபெறவுள்ள போட்டியின் மூலம் வசூலாகும் பணத்தின் ஒரு பகுதியை இலங்கைத் தமிழர் நல நிதிக்காக, முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்க்கவுள்ளோம்.
நடிகர்கள் பரத், ஆர்யா, ஜீவா, சிம்பு, ஸ்ரீகாந்த், விக்ராந்த், சாந்தனு, ரமணா, ஜே.கே.ரித்தீஷ், வெண்ணிலா கபடி குழு புகழ் விஷ்ணு, ரமேஷ் உள்ளிட்டோர் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனராம்.
இவர்களில் விஷ்ணு நிஜமான கிரிக்கெட் வீரர். 16 வயதுக்குட்பட்டோர், 19, 22 வயதுக்குட்பட்டோர் பிரிவு தமிழ் நாடு அணியில் இடம் பெற்று ஆடியுள்ளார். இதுதவிர ரெஸ்ட் ஆப் இந்தியா, தென் மண்டல அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
நிஜமான கிரிக்கெட் வீரர் என்பதால் என் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. நிறைவேற்றுவேன் என நம்புகிறேன் என்கிறார் விஷ்ணு.
இந்த போட்டியின் விசேஷமாக, சியர் லீடர்ஸ் அழகிகளும் இடம் பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளனராம்.
போட்டி நடைபெறும் நாளின்போது தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களை வரவழைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் திட்டமும் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











