குசேலனில் சுஜா ஆட்டம்

ரஜினி படத்தில் துக்கடா கேரக்டர் கிடைத்தாலும் நடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம், லட்சியத்துடன் பல நடிகர்களும், நடிகைகளும் உள்ளனர். குறிப்பாக நடிகைகளுக்கு எப்படியாவது ரஜினி படத்தில் தலை காட்டி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
அப்படிப்பட்ட எண்ணத்தில்தான் குத்தாட்ட புகழ் சுஜாவும் இருந்து வருகிறார். ஆனால் ரஜினி படத்தில் குத்தாட்டம் என்பது அரிதான விஷயம் என்பதால் இதுவரை அது கை கூடாமல் இருந்து வந்தது சுஜாவுக்கு.
ஆனால் குசேலன் படத்தில் ஒரு குத்தாட்டப் பாட்டை வைத்துள்ளார் பி.வாசு. அந்த வாய்ப்பை சுஜாவுக்குக் கொடுத்து அவரது ஜென்ம லட்சியத்தை பூர்த்தி செய்துள்ளார்.
குசேலன் படத்தில் இடம்பெறும் அந்தக் குத்தாட்டப் பாட்டுக்கு ஆடவிருப்பதை பூரிப்போடும், பெருமையோடும் சந்திப்போரிடம் எல்லாம் சந்தோஷமாக கூறிக் கொண்டிருக்கிறார் சுஜா.
பாட்ஷா படத்தில் கவர்ச்சி நடனமாடி அறிமுகமானவர்தான் அல்போன்சா. அந்தப் படத்திற்குப் பிறகு அல்போன்சாவுக்கு பெரிய அளவில் மார்க்கெட் உண்டானது. நல்ல மார்க்கெட் இருந்த நிலையிலேயே கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் அல்போன்சா.
அதேபோல தனக்கும் குசேலன் மூலம் பெரும் பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, குத்தாட்டத்திற்கு ஆடத் தயாராகிக் கொண்டிருக்கிறாராம் சுஜா.


Click it and Unblock the Notifications











