சிறந்த தமிழ் விளம்பரங்கள்: சூரியன் எப்.எம்.முக்கு 4 விருதுகள்!

இந்த விருதுகளை சென்னையைச் சேர்ந்த ஆட் கிளப் வழங்கியுள்ளது. புதன்கிழமை மாலை நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல விளம்பர நிறுவனங்கள், எப்.எம். ரேடியோக்கள், டி.வி சேனல்கள் கலந்து கொண்ட இந்த விருதுப் போட்டியில் சன் நெட்வொர்க்கின் சூரியன் எப்.எம். நிறுவனம் மட்டும் தங்கம் உட்பட 4 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.
திருமணமான தம்பதிகள் எய்ட்ஸ் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த விளம்பரத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. எய்ட்ஸ் நோய் ஒழிப்பு தினமான டிசம்பர் 1-ம் தேதியன்று நாள் முழுவதும் வெளியான நிகழ்ச்சிக்கு இடையில் இந்த விளம்பரம் ஒலிபரப்பானது. பெரும் வரவேற்பையும் பெற்றது.
சனிக்கிழமைதோறும் பகல் 2 மணி முதல் 3 மணி வரை மகளிர் மட்டும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் விளம்பரத்துக்கு வெள்ளி விருதும், சுபிக்ஷா மொபைல் ஸ்டேர்ஸூக்கான விளம்பரம் தயாரித்ததற்காக இன்னொரு வெள்ளி விருதும் கிடைத்தது.
திருக்குறளை சென்னை தமிழில் டாக்டர் நைனா கூறுவது போன்ற விளம்பரத்துக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











