ரெட்டி மறைவு - திரையுலகம் கறுப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி

By Staff

Tribute to YSR
ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்லர் ராஜசேகர ரெட்டிக்கு தமிழ்த் திரைப்பட உலகம் இன்று வெள்ளிக் கிழமை முழுவதும் கறுப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி செலுத்துகிறது.

இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை:

நமது பக்கத்து மாநிலமான ஆந்திராவில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், பெருவாரியான இடங்களை பெற்று இரண்டாவது முறையாக முதல்-மந்திரி ஆனவர், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் மரணம் அடைந்தது அனைவருக்கும் தெரியும்.

ஆந்திர மக்களின் மனதை பெரிதும் கவர்ந்தவர், அவர். தெலுங்கு திரைப்பட உலகுக்கு பல நன்மைகள் புரிந்தவர். அவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததுடன், இன்று(வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறையும் அறிவித்துள்ளார்.

ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று(வெள்ளிக்கிழமை) திரையுலகினர் அனைவரும் கறுப்பு 'பேட்ஜ்' அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்,' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X