திறமையான கலைஞர்களை சினிமா ஏற்றுக்கொள்ளும்: 'ரேணிகுண்டா' ஜானி

துணைவேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் 'ரேணிகுண்டா' படத்தின் கதாநாயகன் சக்ரவர்த்தி என்ற ஜானி பேசும்போது,
'நான் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் மிகவும் தாமதமாக கல்லூரியில் சேர முயன்றதால் படிக்கும் வாய்ப்பு கிடைககவில்லை.
அதன்பிறகு வேறு பாடப்பிரிவில் சேர்ந்து பாதியில் நின்று விட்டேன். எனக்கு கிடைக்காத வாய்ப்பு இந்த பல்கலையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கிடைத்துள்ளது. இதனை அனைவரும் நல்ல முறையி்ல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சினிமாவில் படைப்பு திறன் மிக அவசியம். நிறைய பேரிடம் இந்த திறமை இருந்தாலும் அந்த அளவுக்கு தொழில் நுட்பம் தமி்ழ் திரையுலகில் இல்லை. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் தமிழ் திரையுலகில் புகுந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.
என்னை அங்கீகரித்தது போல உங்களையும் தமிழ் திரையுலம் அங்கீகரிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











