தீபாவளிக்கு எத்தனை படங்கள்..?

By Chakra

Arya and Shriya Saran
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி ஒரு முக்கிய சீஸன். தயாரிப்பாளர்களுக்கும் வசூலை அள்ள நல்லதொரு வாய்ப்பு.

வழக்கமாக 6 படங்களுக்கும் மிகாமல் தீபாவளிக்கு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு 3 படங்கள் கூட வெளியாகவில்லை.

இந்த ஆண்டு 6 படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த உத்தம புத்திரன், ஆர்யாவின் சிக்குபுக்கு தீபாவளிக்கு அரஜுன் நடித்த வல்லக்கோட்டை, ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம், மைனா, வ - குவார்ட்டர் கட்டிங் ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன.

இவற்றில் உத்தமபுத்திரன் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ரீமேக் இது. தனு் ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார்.

சிக்குபுக்கு படத்தில் ஆர்யா-ஸ்ரேயா ஜோடி யாக நடித்துள்ளனர். கே.மணி கண்டன் இயக்கியுள்ளார். காதல் கதையாக உருவாகி உள்ளது.

வல்லக்கோட்டை படத்தில் அர்ஜுன், ஹரிப்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். பக்கா ஆக்ஷன் மசாலா இது.

மைனா படத்தில் விதார்த், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். அமலாபால் சிந்துசமவெளி படத்தில் அனாகா என்ற பெயரில் நடித்து பிரபலமானவர். சிறு வயதிலேயே நட்பாக பழகுவார்கள். வளர்ந்ததும் காதல் வயப்படுவதும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமே கதை.

வ-குவார்ட்டர் கட்டிங் காமெடி படமாக உருவாகியுள்ளது. சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.

ரத்த சரித்திரம் படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய், பிரியாமணி நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

மேலும் 20 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. கமல், திரிஷா ஜோடியாக நடிக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பர் 10-ந்தேதி ரிலீசாகிறது.

விஜய், அசின் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X