twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அலெக்சாண்டரும் வருகிறார்!

    By Staff
    |

    still from Alexander - Royal Utsav
    அக்பரின் கதையைத் தொடர்ந்து அலெக்சாண்டரின் கதையும் படமாகியுள்ளது. வருகிற 18ம் தேதி இப்படம் திரையிடப்படவுள்ளது.

    அக்பரின் கதையை பின்னணியாகக் கொண்டு வெளியாகியுள்ள ஜோதா அக்பர் பெரும் வெற்றி பெற்று உலகெங்கும் ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மாவீரன் அலெக்சாண்டரும் படமாகியுள்ளார்.

    இப்படத்தையும் பாலிவுட்தான் தயாரித்துள்ளது. விக்ரம் குமார், திரிப்தா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'ராயல் உத்சவ்' என பெயரிட்டுள்ளனர். ஏப்ரல் 18ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

    ரவி கே.பட்வா இயக்கியுள்ளார். ஜோதா அக்பரைப் போலவே இப்படமும் பிரமாண்டமாக இருக்கும் என இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

    கி.மு. 400வது ஆண்டின் பின்னணியில் கதை நடப்பது போல காட்டியுள்ளார் பட்வா.

    பல்வேறு நாடுகளையும் கைப்பற்றிய கையோடு இந்தியாவுக்கு வருகிறார் அலெக்சாண்டர். ஆனால் மற்ற நாடுகளைப் போல இந்தியாவுக்குள் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை அந்த மாவீரனின் படைகளால்.

    இருப்பினும் பஞ்சாபில் நிலவிய கடும் எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி ஒரு வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது அலெக்சாண்டரின் படைகள்.

    ஆனால் அதற்கு மேல் முன்னேற முடியாமல் திரும்பிச் செல்கிறார் அலெக்சாண்டர். நாடு திரும்பும் வழியில் மரணமடைகிறார் அலெக்சாண்டர். அதன் பிறகு அலெக்சாண்டர் மறு பிறவி எடுப்பதாகவும், இந்தியாவுக்குத் திரும்பி ராணி ரூப்மதியை மணப்பதாகவும் காட்டியுள்ளாராம் இயக்குநர் பட்வா.

    100 மில்லியன் ரூபாய் செலவில் ராயல் உத்சவ் உருவாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் படத்தை வெளியிடுகின்றனர். இந்தியில் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் இப்படம் வெளியாகிறதாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X