மீண்டும் வந்த ஜீனத் அமன்

By Staff

Zeenat Aman
அக்காலத்து கனவுக் கன்னியாக, இந்திய திரை ரசிகர்களின் இதயங்களில் வீற்றிருந்த ஜீனத் அமன், 'அக்லி அவுர் பக்லி' படம் மூலம் சூப்பரான ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

ரன்வீர் ஷோரி, மல்லிகா ஷெராவத்தின் கலக்கல் நடிப்பில் வெளியாகியுள்ள படம்தான் அக்லி அவுர் பக்லி. இப்படத்தில் மல்லிகாவின் நடிப்பைப் பார்த்து பலரும் மிரண்டு போயுள்ள நிலையில் கூடவே ஜீனத் அமனையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களை விட ஜீனத்தான் படு ஜாலியாக இருக்கிறார். அக்லி பட அனுபவம் குறித்து கூறுகையில், ரொம்ப அற்புதமான அனுபவம் அது. ரன்வீர்ஷோரி, மல்லிகா ஆகியோருடன் இணைந்து நடித்தது ஜாலியாக இருந்தது. அழகிய அனுபவம், நீண்ட நாளைக்குப் பிறகு. பழைய நினைப்பெல்லாம் வந்து போனது.

ரன்வீரும் சரி, மல்லிகாவும் சரி, போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர். அவர்களுடன் நடித்ததை பெரிய விஷயமாக நினைக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு குடும்பம், குழந்ைதகள் என்று செட்டிலாகி விட்டேன். அப்படியே காலம் ஓடி விட்டது. எப்படி என்றே தெரியவில்லை. அவ்வளவு வேகமாக போய் விட்டது.

அக்லி ...யில் நான் நடித்த பாத்திரத்தை ரசித்து நடித்தேன். மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளேன். சில கேரக்டர்களும் வந்துள்ளன என்றார் ஜீனத்.

தற்போது கோன் ஜீதேகா பாலிவுட் கா டிக்கெட் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறாராம் ஜீனத். அதுவும் சிறப்பான அனுபவமாக உள்ளதாம். கூடவே நல்ல கேரக்டர்களாக கிடைத்தால் நடித்தும் கலக்குவாராம்.

70களில் ரசிகர்களின் இதயங்களை தாக்கிய கவர்ச்சி இடிதான் ஜீனத் அமன். ஹரே ராம் ஹரே கிருஷ்ணா, சத்யம் சிவம் சுந்தரம், ஷாலிமார், டான் என இவர் நடித்த ஹிட் படங்கள் ஏராளம்.

கிளாமரில் புது இலக்கணம் படைத்த ஜீனத்துக்கு இப்போதைய மிகப் பெரிய பொழுதுபோக்கு கார்டனிங்கும், ரீடிங்குமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X