முதல் கணவரோடு மீண்டும் சேர்ந்தார் வனிதா விஜயகுமார்!

By Shankar

சென்னை: கருத்து வேறுபாடால் பிரிந்து, ஆனந்தராஜன் என்பவரை திருமணம் செய்து, முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையான விஜய்ஸ்ரீ ஹரி

மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தவர் வனிதா.

நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். பின்னர் ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மகன் விஜய் ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷுடன் வசித்தார். மகனை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா வற்புறுத்தினார். ஆகாஷ் மறுத்துவிட்டார். விஜயகுமாரும் இதில் ஆகாஷ் பக்கமே நின்றார். விஜயகுமார் தாக்கப்பட்டார். ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதா போலீஸ், கோர்ட்டு என்று சென்றார்.

நீதிமன்றத்தில் தீர்ப்பு வனிதாவுக்கு சாதகமாக வந்தது. விஜயஸ்ரீஹரி வனிதாவுடன் வசிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் வனிதாவுடன் செல்ல மறுத்துவிட்டான்.

இதனால் வனிதாவும் ஆகாஷும் கடுமையாக மோதிக் கொண்டனர். தினசரி பத்திரிகையைத் திறந்தாலே இவர்கள் செய்திதான் எனும் அளவுக்கு நிலைமை போனது. காவல் நிலையத்தை முற்றுகையிடுவது, ஆகாஷ் வீட்டு முன்பு உண்ணாவிரதம் என வனிதா செய்த பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

ஆனால் எவ்வளவு போராடியும் மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாத நிலையில், வனிதா தன் இரண்டாவது கணவரை பிரிவு முடிவு செய்து அறிவித்தார். மகனுக்காக இந்த முடிவு என்றும் அவர் கூறினார்.

ராஜனைப் பிரிந்ததோடு, முதல் கணவர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழவும் விருப்பம் தெரிவித்தார்.

அதன்படி ஆகாஷும் வனிதாவும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். பொதுநிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கிறார்கள். புத்தாண்டை ஓட்டலில் ஒன்றாக கொண்டாடினார்கள். அப்போது போட்டோவுக்கு சேர்ந்து போஸ் கொடுத்தனர்.

கடந்த ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில், ஒரு சின்ன பையனின் பிடிவாதம், உறவுகளையே மாற்றிப்போட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X