டேக்வாண்டோ போட்டி-ஷாருக் குழந்தைகள் தங்கப் பதக்கம் வென்றனர்

By Sudha

Sharukh with kids
6வது தேசிய ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் டேக்வாண்டோ போட்டிகளில் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனும், மகளும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஷாருக்கான்-கெளரி தம்பதிக்கு ஆர்யன் என்ற 13 வயது மகனும், சுஹானா என்ற 10 வயது மகளும் உள்ளனர்.

இருவரும் டேக்வாண்டோவில் தீவிரப் பயிற்சி பெற்றவர்கள். மும்பையில் நடந்த தேசிய ஜூனியர் பிரிவில் ஆர்யனும், சப் ஜூனியர் பிரிவில் சுஹானாவும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.

மகனும், மகளும் கலந்து கொண்ட இந்தப் போட்டியை ஷாருக் கான் தனது மனைவி கெளரியுடன் சேர்ந்து ரசித்து மகிழ்ந்தார்.

இதை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து மகிழ்சியைப் பகிர்ந்துள்ளார் ஷாருக் கான்.

கடந்த ஆண்டு கொரிய அரசு ஷாருக் கானுக்கு டேக்வாண்டோ சிறப்பு பெல்ட்டை வழங்கிக் கெளரவித்தது. அப்போது ஷாருக் கான் பேசுகையில், எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த டேக்வாண்டோ பெல்ட் என்பதைத் தவிர இதுகுறித்து வேறு எதுவுமே தெரியாது. ஆனால் எனது பிள்ளைகளுக்கு கொஞ்சம் அதிகமாக தெரியும் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X