கஜோலை மயக்கிய இட்லி, சாம்பார்!

கஜோல் 2வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். தனது 2வது குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கஜோல், தனக்குப் பிடித்தவற்றை ஒன்று விடாமல் அனுபவித்து வருகிறாராம்.
அதில் சாப்பாடும் ஒன்று. இந்தியாவின் பல வகையான உணவு வகைகளை சாப்பிட்டுள்ள கஜோலுக்கு தென்னிந்திய உணவு வகைகள் மீது திடீர் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் சமையல் கலையில் பிரபலமாக இருக்கும் முத்துச்சாமியை அழைத்து ரெஸிப்பி குறித்து கேட்டார்.
அதில் தனக்குப் பிடித்த சில ஐட்டங்களைச் சொல்லி அவற்றை ஸ்பெஷலாக செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அத்தோடு நில்லாமல் இதை சின்ன விருந்து போல மாற்றிட நினைத்த அவர் தனக்கு நெருக்கமானவர்கள் சிலரையும் வரவழைத்து தென்னந்திய உணவுத் திருவிழா போல மாற்றி விட்டார்.
இந்த விருந்தில் கஜோலுக்குப் பிடித்த இட்லி, சாம்பார், ரசமும் இடம் பெற்றிருந்ததாம். அதை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டாராம் கஜோல்.


Click it and Unblock the Notifications











