பெப்சி உண்ணாவிரதம்: இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்காத நடிகர், நடிகைகள், தனியாக 1ம் தேதி உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பெப்சி அமைப்பினரும் இன்று உண்ணாவிரதம் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவையும், சிங்கள ராணுவத்துக்கு எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர்.
சென்னை வடபழனியிலுள்ள அருணாசலம் சாலையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இப்போராட்டம் நடக்கிறது. ஃபெப்சி அமைப்பில் இடம்பெற்றுள்ள 24 சங்கத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர். அவர்களைத் தவிர நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டனர். பின் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
போராட்டத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தொடங்கி வைக்கிறார். இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் தியேட்டர்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்படும்.


Click it and Unblock the Notifications











