பேட்மேன் - நிஜமான சூப்பர் ஹீரோ!

உலகம் முழுவதும் காமிக்ஸ் புத்தகங்கள், திரைப்படங்கள், அனிமேஷன்கள் மூலம் ஏகப்பட்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் உலவிக் கொண்டுள்ளன. அவற்றில் மிகப் பெரிய சூப்பர் ஹீரோ பேட்மேன்தான் என்று எஸ்எப்எக்ஸ்.கோ.யுகே என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் ஆகிய கேரக்டர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு பேட்மேன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாம். இப்போது உள்ள, இதற்கு முன்பு இருந்த சூப்பர் ஹீரோக்களிலேயே கிரேட் சூப்பர் ஹீரோ பேட்மேன்தான் என்கிறது இந்தக் கணிப்பு.
1939ம் ஆண்டு பேட்மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை உலக அளவில் எண்ணற்ற ரசிகர்கள் பேட்மேனுக்கு உள்ளனர். இந்த ரசிகர்களின் ஏகோபித்த வாக்குகள் பேட்மேனுக்கேக் கிடைத்துள்ளது.
இந்த வரிசையில் ஸ்பைடர்மேனுக்கு 2வது இடமும், சூப்பர்மேனுக்கு 3வது இடமும் கிடைத்துள்ளன.
வோல்வரைனுக்கு 3வது இடமும், அயன்மேனுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications











