twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசித்திர உருவத்தில் அமிதாப்!

    |

    குள்ளமான உருவம்.. சற்றே விகாரமான, மன வளர்ச்சி பிறந்த மாணவனின் தோற்றம்... 'பா' (Paa) படத்தில் இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் மிரண்டு போவார்கள்... அது பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்!.

    உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. ரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை 'சீனி கும்' என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குநர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

    வெறும் மேக்கப்புக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்திருக்கிறார் பால்கி.

    இந்தப் படத்தின் கதை மட்டுமல்ல... அமிதாப்பின் தோற்றமும் வித்தியாசமானது. மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக இதில் தோன்றுகிறார் அமிதாப். இதற்காக அமிதாப்புக்கு ஸ்பெஷல் மேக்கப் செய்ய லண்டனிலிருந்து நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டாராம்.

    அபிஷேக் பச்சனின் மகனாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம் அமிதாப். டிசம்பர் 4ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது 'பா'.

    மனதைக் கரைக்கும் 'ராஜ இசை'!:

    படத்தின் மிக முக்கிய அம்சம் இசை. வேறு யார்... நம்ம மேஸ்ட்ரோ இசைஞானிதான். நாடி நரம்புகளிலெல்லாம் மின்சாரம் பாய்ச்சும் ஏழு பாடல்கள்... அவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அசத்தலான பின்னணி இசை என அமிதாப் உள்ளிட்ட குழுவினரை அசர வைத்துள்ளாராம் ராஜா.

    குறிப்பாக இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ராஜா போட்டுக் கொடுத்திருக்கும் ஒரு தீம் மியூசிக் கேட்கும்போதே மனதை கரைத்து கலங்கடிக்கிறது.

    இந்த இசைக்கான பாடலை ஏற்கெனவே தமிழில் பாலுமகேந்திராவின் படத்துக்காக ராஜா போட்டிருந்தார். 2 நிமிடம் மட்டுமே வந்த அந்தப் பாடலை ராஜாவே பாடியிருப்பார் தமிழில் (அது ஒரு கனாக்காலம்... 'காட்டு வழி கால்நடையா போற தம்பி...'). அதைத்தான் முழுக்க வயலின் வாசித்து மனங்களையெல்லாம் அடிமைப்படுத்தியிருக்கிறார் 'பா' படத்தில்.

    இந்தப் படத்தில் ராஜாவின் இசையில் அமிதாப் ஒரு பாடலும் பாடியுள்ளார். படத்தின் பின்னணி இசையுடன் சில காட்சிகளைப் பார்த்த அமிதாப், ஆனந்தத்தில் கண் கலங்கி சொன்ன வார்த்தைகள் இவை.."இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞர் இவர். ஏன் இத்தனை காலமும் பாலிவுட் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!".

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X