குசேலனில் தலேர் பாட்டு

By Staff

Daler Mehndi with G.V. Prakash
பஞ்சாபி பாடகர் தலேர் மெஹந்தி சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளா.

சிவாஜியைத் தொடர்ந்து பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயனதாரா நடிக்கும் படம் குசேலன். மீனா, பசுபதி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இதில் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், கேரளா என்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகன் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

ரஜினிக்கு முதல்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் அதை மேலும் மெருகூட்டும் வகையில் பஞ்சாப் பிரபல பாடகர் தலேர் மெஹந்தியை இந்த படத்தில் பாட வைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஹை பீட்டில் தலேர் பாடும் இந்த பாடல் ரஜினி ரசிகர்களை நிச்சயம் குஷிப்படுத்தும் என்று கூறியிருந்தார் பிரகாஷ்.

அதன்படி ரஜினிக்காக தலேர் மெஹந்தி பாடும் பாடலின் கம்போசிங் சென்னையில் நடந்தது. பிரகாஷூன் இசையில் தலேர் மெஹந்தி உற்சாகமாக ஆடியபடி பாடினார்.

உதித் நாராயணன் போல தமிழை கடித்து துப்பியுள்ளாரா என்பது பாடல் வெளியாகும்போதுதான் தெரியும்.

தலேரின் பாட்டுக்கு ரஜினியுடம் யார் ஆட்டம் போடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X