செல்வராகவனுக்கு இசைக்கும் அமரன்!

By Staff

Gangai Amaran with SPB
இயக்குநர் செல்வராகவன் நிஜமாகவே பிஇ பட்டம் பெற்ற இன்ஜினீயர். ஆனால் 'அனிதாவின் காதல்களும்', வீட்டுச் சூழலும் அவரை டிராயிங் ஷீட், கம்ப்யூட்டர் ஸ்கெட்ச்சையெல்லாம் தூக்கியெறியச் செய்து ஸ்டார்ட் கட் சொல்ல வைத்து விட்டது.

அவரது நிஜக் கதையே இப்போது படமாகிறது. படத்துக்குப் பெயர்... செல்வராகவன் பிஇ!

செல்வராகவனிடம் உதவியாளராக இருந்து பின்னர் இணை இயக்குநரான பரந்தாமன் தனது குருவுக்கு செலுத்தும் மரியாதையாக இந்தப் படத்தை எடுக்கிறாராம்.

படத்துக்கு இசை யார் தெரியுமா... சகலகலா வல்லவன் கங்கை அமரன்!

எண்பதுகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். செந்தூரப் பூவே, உறவுகள் தொடர்கதை... போன்ற பல அர்த்தமுள்ள பாடல்களை எழுதி கவியரசர் கண்ணதாசனிடமே பாராட்டுப் பெற்றவர்.

ரஜினி ஒருவரைத் தவிர மற்ற அவரது சமகால நடிகர்கள் அனைவரையுமே இயக்கியவர். ரஜினி-கமல் என்ற சூப்பர் ஸ்டார்களுக்கே ஷாக் கொடுத்த ராமராஜன் என்ற 'மக்கள் நாயகனை' உருவாக்கியவர்.

இடையில் அண்ணன் இளையராஜாவிடம் மனஸ்தாபம், அன்னை பக்தராகி பாண்டிச்சேரி வாசம் என திரையுலகிலிருந்து சற்றே விலகியிருந்த அமரன் மீண்டும் முழு வேகத்தோடு இந்தப் படத்துக்கு இசையமைக்க வந்திருக்கிறார்.

வாங்க... வாங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X