ஒரு புதுமுகத்தைப் போலவே போராடுகிறேன்! - ஸ்ருதி

கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி. இசைத் துறையில் நிறைய கற்றுள்ள ஸ்ருதி அவற்றை செயல்வடிவில் கொண்டுவரும் ஆவலில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியில் லக் என்ற படத்திலும் நடித்து வருகிறார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி தன் தந்தை நடிக்கும் தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார்.
ஒரு புதுமுகமாக, தனது திரை அனுபவங்கள் குறித்து ஸ்ருதி சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி:
என் தாய் மற்றும் தந்தையின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு ஒருபோதும் நான் வாய்ப்புக் கேட்டதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு இல்லாமலே போனாலும் கவலையில்லை.
அதேபோல நடிப்பு பற்றி என் தந்தையிடமோ, தாயிடமோ நான் ஒருபோதும் பேசுவதில்லை. எனக்கு என்ன வருமோ அதை பர்ஃபார்ம் செய்தால் போதும்.
தலைவன் இருக்கின்றான் இசையமைப்பாளராக நான் பணியாற்றத் துவங்கியிருப்பது குறித்து பின்னொரு வாய்ப்பு வரும்போது சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு சிறந்த இசை ஆல்பத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன்.
தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பார்க்கலாம், என்றார் ஸ்ருதி.
இரு தினங்களுக்கு முன் கமல் அளித்த ஒரு பேட்டியில், என் மகள் ஸ்ருதிக்கு என் பெயரே ஒரு சுமைதான் என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











