தமிழில் ஜாக்கி!

படத்தின் பெயர் ஆரண்ய காண்டம். எஸ்பிபி சரண் தயாரிக்கும் இந்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா என்பவர் இயக்குகிறார். ஏற்கெனவே சில பிரபல விளம்பரப் படங்களை எடுத்துள்ளவர்தான் இவர்.
இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோவாக நடிப்பவர் ரவிகிருஷ்ணா. சம்பத்துக்கும் முக்கிய வேடம் உண்டாம்.
படத்தின் கதைக்கு ஜாக்கியைப் போன்ற திறமையும் அனுபவமும் மிக்க ஒரு நடிகர் வேண்டும் என்பதாலேயே இந்தப் படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்தோம். மேலும் ஜாக்கியும் தமிழில் நடிக்க ஆர்வமாகத்தான் இருந்தார், என்கிறார் தயாரிப்பாளர் சரண். சம்பளமும் பெரிதாகக் கேட்கவில்லையாம்!
அதானே முக்கியம்...
Comments


Click it and Unblock the Notifications