twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்ப் பெண்களிடம் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கிறேன்: நடிகர் ஜெயராம்

    By Staff
    |

    Jayaram
    நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன்.

    தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட என்னை மன்னித்து தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் மனதில் இடம் தர வேண்டும் என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.

    மலையாள ஏசியாநெட் டிவிக்கு அளித்த பேட்டியில், நிஜ வாழ்க்கையில் நீங்கள் வீ்ட்டு வேலை பார்க்கும் பெண்ணை சைட் அடித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் என்று கூறியிருந்தார்.

    ஜெயராமின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இயக்குநர் தங்கர்பச்சான், பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பல்வேறு மகளிர் அமைப்புகள் ஜெயராமுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

    பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்தக் கொந்தளிப்பைத் தொடர்ந்து ஜெயராம் பணிந்து வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

    என் அன்பு தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட ஜெயராம் எழுதும் விளக்க மடல்.

    நான் கடந்த 23 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். இதுவரை மனம் அறிந்து நான் எவரையும் புண்படுத்தும் வகையில் எந்த வார்த்தையும் சொன்னதில்லை. நடந்து கொண்டதும் இல்லை.

    அப்படி இருக்க என்னை அமோகமாக வரவேற்று, ஆதரித்த தமிழ் உள்ளங்களை நான் எந்த வகையிலாவது புண்படுத்துவேனா?.

    அப்படி செய்தால் அது தாயை பழிப்பதுபோல் ஆகும் அல்லவா?.

    தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்னது நான் செய்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எதார்த்தமாக சொன்ன ஒரு ஜோக். கண்டிப்பாக அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு சொன்னது அல்ல. இது மனசாட்சி மீது ஆணை.

    இருந்தும் இது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை முக்கியமாக தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன். தயவு செய்து இதை ஏற்றுக்கொண்டு உங்கள் மனதில் மீண்டும் எனக்கு இடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயராம் கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X