ஸ்ருதி கமல்ஹாசனின் இசை அருவி!

அமெரிக்காவின் பிரபல இசை இதழ் ரோலிங் ஸ்டோன். இந்த இந்த இந்தியாவிலும் தற்போது வெளியாகவுள்ளது. இதன் தொடக்க விழா மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ஆனந்த் மகிந்திரா முதல் இதழை வெளியிட்டார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஸ்ருதி கமல்ஹாசனின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் கமல்ஹாசன், கெளதமி, அக்சரா கமல், கெளதமியின் மகள் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ருதி நடிக்கப் போகும் முதல் தமிழ்ப் படத்தின் ஹீரோ மாதவனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், ஸ்ருதியின் பிசிறில்லாத இசை விருந்தை கரவொலி எழுப்பிப் பாராட்டினர். தன் மகளை சான்றோர் பாராட்டியதால், மகிழ்ந்த தந்தை, மகளுக்கு அன்பு முத்தம் தந்தார்.
நடிக்க வரப் போகும் ஸ்ருதி தற்போது இசை ஆல்பத்தை உருவாக்குவதில் படு பிசியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே.
Comments


Click it and Unblock the Notifications