கார்தஷியானுக்கு குழந்தை வேண்டுமாம்

டிவி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் கிம் கார்தஷியான். இவரது தங்கச்சி கோர்ட்னி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இது அவருக்கு முதல் குழந்தை.
தனது தங்கைக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்காக தற்போது ஷாப்பிங்கில் பிசியாக உள்ளார் கிம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தங்கைக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்க்க அவளை விட நான் ஆவலாக இருக்கிறேன்.
அது மட்டுமல்ல, எனக்கே எனக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும் என்ற ஆசையும் வந்து விட்டது.
என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதை இப்போதே அறிய ஆவலாக உள்ளேன். ஆனால் கோர்ட்னியோ அது சஸ்பென்ஸாகவே இருக்கட்டும் என்கிறாள். என்னாள் சஸ்பென்ஸ் எல்லாம் வைத்து காத்துக் கொண்டிருக்க முடியாது.
குழந்தைக்காக டிரஸ் வாங்குவது, பொம்மை வாங்குவது எல்லாம் ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் என்ன குழந்தை என்று தெரியாமல் ஆண், பெண் குழந்தைகளுக்கான ஐட்டங்களை சேர்த்தே வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் கிம்.


Click it and Unblock the Notifications











