தனியார் விருந்துகளில் ஆட கரீனா, பிரியங்கா மறுப்பு
தனியார் ஏற்பாடு செய்யும் விருந்து நிகழ்ச்சிகளில் ஆட மறுக்கிறார்களாம் நடிகைகள் கரீனா கபூரும், பிரியங்கா சோப்ராவும். இதேபோல கரீனாவின் காதலரான சைஃப் அலிகானும் ஆட மறுத்து விடுகிறாராம்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஆட வருமாறு கரீனாவையும், சைஃபையும் கூப்பிட்டிருந்தனர். ஆனால் இருவரும் மறுத்து விட்டனராம். அதேபோல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஆட வருமாறு பிரியங்கா சோப்ராவைக் கூப்பிட்டுள்ளனர். இதற்காக ரூ. 3 கோடிவரை தருவதாக கூறியும் கூட அதை நிராகரித்து விட்டாராம் பிரியங்கா சோப்ரா.
தனியார் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் முன்பு நேரடியாக ஆடுவதை பிரியங்கா சோப்ரா விரும்பவில்லையாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதுபோன்ற வாய்ப்புகள் தேவை இல்லை என்கிறாராம் பிரியங்கா. அவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு ஆகியோர் இதுபோன்ற டான்ஸுகளுக்கு பெரும்பாலும் நோ சொல்வதில்லையாம்.


Click it and Unblock the Notifications











