கசாப்புக்குத் தூக்குத் தண்டனை- சினிமாவில்!

மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய ஒரே தீவிரவாதி அஜமல் கசாப் மட்டுமே. அந்த வழக்கில் கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவனுக்கான தண்டனை குறித்து நாளை அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில்,.கசாப் குறித்து இந்தியில் ஒரு படம் தயாராகி வருகிறது. அசோக் சக்ரா என்ற பெயரில் மும்பைதீவிரவாத தாக்குதல் சம்பவத்தை பின்னணியாகவைத்து ஒரு படம் தயாராகியுள்ளது. மே 28ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
ராஜன் வர்மா என்ற புதுமுக நடிகர் கசாப் வேடத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட கசாப் போலவே இவருக்கு முகவெட்டு இருப்பதால் இந்த ரோலுக்கு இவரை நடிக்க வைத்துள்ளனர்.
இப்படத்தில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுவதாக காட்சி இடம்பெற்றுள்ளதாம். மே 9ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.
Comments
இந்தி கசாப் சினிமா தூக்குத் தண்டனை மும்பை தீவிரவாத தாக்குதல் ராஜன் வர்மா cinema death sentence hanging hindi kasab mumbai terror attack rajan verma


Click it and Unblock the Notifications