ரஜினி பிறந்த நாளில் பாபாஜி ஆல்பம்!

ரஜினி தன் குருவாக வணங்குபவர் மஹாவதார் பாபாஜி. இமயமலையில் 2000 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக அவரது பக்தர்கள் நம்புகிறார்கள். அவர் பெயரில் பாபா எனும் படத்தையும் ரஜினி தயாரித்து, பாபாவாக நடித்தார்.
இப்போது பாபாஜியின் அற்புதங்களைச் சொல்லும் தமிழ்ப் பாடல்கள் அடங்கிய ஆல்பம், 'பகவான் ஸ்ரீ பாபாஜி' பெயரில் தயாராகியுள்ளது. பரணி இசையமைக்கிறார்.
மைக்ரோ மேக்ரோ பிலிம்ஸ் சார்பில் ராமநாதன் தயாரிக்கும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாலசுப்ரமணியம் எழுதியுள்ளார். பிரபல பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடியுள்ளனர்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இந்த ஆல்பம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











