தரமுடன் தயாராகும் தமிழ்ப் படங்கள்-மலையாள இயக்குநர் ரஞ்சித் புகழாரம்
தமிழ்த் திரைப்படங்கள் நல்ல தரமுடன் தயாராகி வெளியாகின்றன என்று பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் புகழ்ந்துள்ளார்.
பிராஞ்சியேட்டன், செய்ன்ட், கேரளா கபே உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ரஞ்சித். மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழ்த் திரைப்படங்களை வெகுவாக காதலிக்கிறார். தமிழ்ப் படங்களை வெகுவாக பாராட்டவும் செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பத்தில் மலையாளப் படங்களின் தரத்தைப் பார்த்து தமிழில் பல படங்கள் வந்தது உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. தமிழ் படங்கள் மிகுந்த தரமுடன் வருகின்றன.
மலையாளப் படங்களை மட்டுமே இயக்கிய அனுபவம் உள்ள என்னால் தமிழ்ப் படங்களை இயக்க முடியுமா என்பது சந்தேகம்தான். தமிழ்ப் படங்களுக்கு நான் பொருத்தமற்றவானகவே உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
Comments
தமிழ்ப் படங்களின் தரத்தைப் புகழும் மலையாள இயக்குநர் பாராட்டு மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் malayalam film director ranjith ranjit hails tamil movies


Click it and Unblock the Notifications